காதலின் மீதியோ நீ-7

காதலின் மீதியோ நீ-7

காதலின் மீதியோ நீ-7

ஆயுஷ் வெளியே வரும்போது சிரித்தவாறே வந்தான்.

சைட்டில் நடந்த சண்டையில் அவள் முத்தம் கொடுப்பாள் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்காதவன் அந்த முத்தத்தில் அதிர்ந்து நின்றது இதுதான் முதன் முறை.

அவனுக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்கள்ல ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு.

ஏதேச்சையா முத்தம் வைத்தவர்களும் உண்டு. பார்ட்டிகளில் சந்தோசத்தில் முத்தம் வைத்தவர்களும் உண்டு. ஆனால் உதட்டு முத்தமளவிற்கெல்லாம் அவன் போனதில்லை.

இவள் கொடுத்த சாதாரண முத்தத்திலயே மின்சாரத்தை உணர்ந்தானே! அதில் அப்படியே அதிர்ந்து நின்றவனிடம் அடுத்தக்கட்டமாக உதட்டைக் கடித்து முத்தம் வைத்ததும்தான் அடேய் இவ என்னலாமோ பண்றா?ஆ னால் மனசுக்குள்ள ஒருமாதிரி குஜாலா இருக்கு என்றுதான் நினைத்தானே தவிற,அவளைத் தள்ளிவிடணும் என்றெல்லாம் நினைக்கவேயில்லை.இப்போ அவனது ஸ்டேட்டஸ் எங்கப்போச்சுன்னு அவன் மனசுதான் தேடிக் கண்டுப்பிடிக்கணும்!

அதன்பிறகுதான் நிதானித்து அவள் பேச ஆரம்பிக்கும்போது ‘என்னது எச்சில் முத்தம் வைச்சாளா?அப்படியென்னும் தெரியலையே.நல்லாதானே இருந்தது என்று யோசித்தவன் டேய் மானங்கெட்டவனே அவ உன்னை வண்டை வண்டையா திட்டிட்டிருக்கா. நீ கொடுத்த முத்தத்தை நினைச்சு குஜாலா பீல்’ பண்ற என்றதும்தான் அவளருகில் போய் அவளது துப்பட்டாவை எடுத்து முகத்தையும் உதட்டையும் துடைத்துவிட்டுக் கீழே ப்ளோருக்கு இறங்கிப்போனான்.

அவன் போகும்போதே மனதிற்குள் அவள் விதையாக விழுந்து அது காதல் செடியாக முளைக்க ஆரம்பித்திருப்பதை உணர்ந்தான்.

அவளை கடுப்பாக்கணும்னுதான் ஏய் கீழ வா இன்னும் கனவுலயே இருக்காத என்று கூப்பிட்டான். அதைக்கேட்டு கடுப்பானவள் படியில் வரும்போது அவளை நிமிர்ந்துப்பார்த்தான்.

அவனுக்கே தன்னை நினைத்து சிரிப்பு வந்தது. அவளைப் பார்த்த வண்ணமே இருந்தவனுக்கு அவள் தடுமாறவும் எங்கிருந்து வேகம் வந்தது என்று தெரியாதளவுக்கு வேகமாக ஓடி அவள் விழவும் தாங்கிக்கொண்டான்.

அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது என்று நினைத்தாலும் மயங்கியதும் ஒருவித பயம் வந்தது.அப்படியே தூக்கிக்கொண்டு கீழே வந்தவனுக்கு அப்போதுதான் தன். தவறை உணர்ந்தான்.

அவன் இருப்பது பத்தொன்பதாவது மாடி அங்கிருந்து கீழே தூக்கிட்டு வரதுக்குள்ள அவனுக்கே ஒருமாதிரியாகிவிட்டது.

அப்போதுதான் உணர்ந்தான். ஜிம்பாடியான நமக்கே கீழிறங்கும்போது இப்படி நாக்குத் தள்ளுதே. அவள் எப்படி இருபது மாடி ஏறியிருப்பாள் என்று யோசித்தவாறேதான் தனது கையில் ஏந்திக்கொண்டு வந்தான்.

அவளது நீண்ட மூடி தரையில் விழவும், கூடவந்த வேலைக்காரர்களிஞம் அதைத் தூக்கி அவள்மேல் போடச் சொன்னான்.

காரில் ஏறி உட்கார்ந்தவன் காரில் அவளைப் படுக்க்வைக்காது தனது கையில் ஏந்தித்தான் வந்தான்.

அன்று அக்லி சாக்லெட் என்று சொன்னவன் அந்த வார்த்தையை இப்போது அபத்தமாக உணர்ந்தான்.

சவுத் இன்டியன்னு சொன்னதும் அவங்களுடைய நிறத்தை வைத்துதானே நம்ம இங்க குறை சொல்லுறோம் நானும் அப்படி பேசிட்டனே!முட்டாளதனமாக சண்டைப்போட்டுருக்கேன் என்று நினைத்தவனுக்கு ஆனாலும் அவளும் பேசினது அதிகம்தான் என்று கோபமும் இருக்கத்தான் செய்ததது.

எப்படியும் கால் வீங்கி விட்டது. காலில்தான் அடி பலமாக இருக்கும், பெரிய பிராக்ட்சரா இருந்தால் என்ன பண்ணுவது? என்று அவரது காலை மெதுவாக எடுத்து தொட்டால் அவ்வளவு மயக்கத்திலும் அவரது நெற்றி புருவம் வழியில் சுருங்கத்தான் செய்தது.

உடனே காலில் இருத்துக் கையெடுத்துவிட்டு அவளது முகத்தையே பார்த்திருந்தான். அவள் கொடுத்த முத்தம் ஏற்கனவே மொத்தமாக அவனுக்குள் மின்னலாக இறங்கியிருந்தது. அதனால் அவளை ரசித்து அப்படியே கண்ணில் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.

ஒருநொடியில் ஒருவனை முழுதாக மாற்றமுடியுமா? என்று யாராவது கேட்டாள் பைத்தியமா இவங்கன்னு கேட்டிருப்பான்.

ஆனால் ஒரு நொடியில் தன்னைமட்டுமல்ல தன் உலகத்தையே மாற்றியிருக்கிறாளே இந்த வாயாடி என்றுதான் அவளையே பார்த்திருந்தான்.

அதற்குள் ஹாஸ்பிட்டல் வரவும் அப்படியே இறங்கி அவனே அவளைத் தூக்கிக்கொண்டுபோய் அட்மிட் பண்ணினான்.

அதைப்பார்த்த டிரைவர் முதற்கொண்டு எல்லோருமே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் பார்த்தார்கள். என்னதான் ஆயுஷ் வேலைக்காரர்களை மதித்தாலும் அவனுக்கென்று ஒரு ஸ்டேட்டஸ் பார்க்கிறவன் என்று எல்லாருக்குமே தெரியும்.

குப்தா அப்படியில்லை! எல்லோரிடமும் இறங்கிப்பழகி தோளில் கைப்போட்டுப் பேசுவார்கள். அதனால்தான் இன்னும் அவரிடம் நிறையபேர்கள் வேலையில் இருக்கிறார்கள்.

ஆயுஷ் சில இடங்களில் கோபப்பட்டாலும் குப்தா அப்படியே அவர்களை அரவணைத்துக் கொண்டுப் போயிடுவார்.

அதனால்தான் இப்பொழுது எல்லாரும் ஆயுஷை அதிர்ச்சியில் பார்த்தனர். இவன் இப்படி எல்லாம் இறங்கி செய்ய மாட்டானே என்று யோசனையோடு பார்த்தார்கள்.

அதற்குள் குப்தாவுக்கு விசுவாசமான டிரைவர் மூலமாக ஆயுஷ் நித்ராவை ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிக் கொண்டு போனது எல்லாம் சொல்லிவிட்டான்.

குப்தா இப்போது யோசனையில் இருந்தார்.என்னாச்சு ஆயுஷுக்கு அந்தப்பொண்ணைத் தன் கையில் தூக்கிட்டுப் போகிறளவுக்கு என்னாச்சு? அதுதான் வேலைக்காரங்க இருந்திருப்பாங்களே? என்று யோசித்தவர் மகனின் மீது ஒரு கண்ணை வைக்கணும் என்று நினைத்தார்.

ஆனால் ஆயுஷ் வேற விதமாக நினைத்திருந்தான். அவன் நித்ராவை ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்துவிட்டு ஆபிஸுக்கு வந்தான்.ஆனால் அவனது மனம் முழுவதும் நித்ரா கண்ணு முழிச்சிருப்பாளா? என்னாச்சுன்னு பார்க்கணுமேன்னுதான் மனது அடித்துக்கொண்டிருந்தது.

அதனால் மாலை சைட்டிலிருந்து சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு நேராகவே ஹாஸ்பிட்டல் போய் பார்த்துவிட்டு அவளும் டிஸ்சார்ஜ்ஜாகி வீட்டுக்குப் போகிறாள் என்று நிம்மதியாக வெளியே வந்தவன் முகம் முழுவதும் அப்படியெரு புன்னகையோடு இருந்தது.

எப்போ பாரும் ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரியே முகத்தை வைத்திருப்பவனின் முகம் பிரகாசமாக இருந்தது.

அவன் வீட்டுக்குள் வரும்போதே அவனது அம்மா பூர்வி அவனைப் பார்த்ததும் ஆச்சர்யமாக என்ன பேட்டா ரொம்ப சந்தோசமா வர்ற?எதுவும் புது ப்ராஜெக்ட் எடுத்திருக்கியா?”என்று அவனது தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தார்.

ஆய்ஷுக்கு இப்போதுதான் தனது புன்னகையை எல்லோரும் பார்க்கிறார்கள் என்று புரியவந்து ”ஒன்னுமில்ல மம்மீ இன்னைக்குக் கொஞ்சம் ஹாப்பீயா பீல் பண்ணேன் அதுதான். புது பிராஜெக்ட் அடுத்தமாசம்தான் தொடங்கப்போறேன்”என்றவாறே தனது அறைக்குள் சென்றான்.

அவனது பாட்டி நீலம் குப்தாவும் அவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டுத்தான் இருந்தார்.

டெல்லியிலயே அவ்வளவு பெரிய அரண்மனை போன்றதொரு வீடு இருக்கிறது.அதுவும் கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள் என்றால் சும்மாவா!

ஜெகன்னாத் குப்தாவுக்கும் மட்டும்தான் இரண்டு குழந்தைகள். ஆயுஷும் பிரீத்தாவும்.பிரீத்தாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆயுஷ்தான் குடும்பத்தில் முத்தவன்.

ஜெகன்னாத்தின் தம்பி இருவர் அவர்களுக்கு மூன்று மூன்று ஆண்குழந்தைகள்.அவர்கள் இரு தம்பிகளும் டெக்ஸ்டைல் பிஸினெஸ். எக்ஸ்போர்ட்ஸ்ல கொடிக்கட்டிப் பறந்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்பமே மொத்தமாக ஆதிக்காலத்தில் இருந்தே தொழில் செய்து பெரிய பெரிய தொழிலதிபர்களை உருவாக்கிய பரம்பரையான குடும்பம.

அதிலிருந்து ஒருத்தன் ஸ்டேட்டஸ் பார்க்கிறதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே!

நீலம் மெதுவாக தனது மருமகள் பூர்வியிடம்”உன் மகன் மனசுக்குள்ள யாரோ புகுந்துட்டாங்க. அதனால் கவனமாக கவனி, அவனுக்கும் கல்யாண ஆசை சீக்கிரம் வந்திரும். கல்யாணம் வேண்டாம்னு சொன்னவன் திடுதிப்புன்னு யாரையாவது கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தடப்போறான்” என்று சொல்லிவிட்டுச் சத்தமாகச் சிரித்தார்.

அப்போதுதான் உள்ளே வந்து கொண்டிருந்த குப்தா அதைக் கேட்டு ஜர்க்காகி சத்தமாக சிரித்து விட்டு யாரு உங்க பேரனா! வாய்ப்பே இல்லை என்று சத்தமாக அவரும் கூட சேர்ந்து சிரித்தார்.

ஆனால் குப்தா சிரிக்க வில்லை சிந்திக்க ஆரம்பித்தார். ஒரு வேலை நித்ராவை விரும்புகிறனோ?அது எப்படி வேலைக்கு வந்த இரண்டே நாளில் அவள் மேல ஆசைப்பட முடியும்.அப்படியெல்லாம் இருக்காது என்று ஒரு மனமும் அப்படியும் இருக்குமோ என்று இன்னொரு மனமும் மாத்தி மாத்தி சொல்லிக் கொண்டிருக்க அவர் அமைதியாக வந்த உட்கார்ந்தார்.

அவரைக் கண்டத உடனே பூர்வி தனது சிரிப்பை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே சென்று தண்ணீர் ஒரு கையிலும் டீ ஒரு கையிலுமாகக் கொண்டு வந்து அவர் முன்பாக நின்றார்.

இப்படி கணவனுக்கு பார்த்துப் பார்த்துசேவைகள் செய்யும் பூர்வி ஒன்னும் படிக்காத பெண்ணோ வசதி இல்லாத பெண்ணோ கிடையாது.

குப்தா குடும்பத்தைவிடவும் இரண்டு மடங்கு அதிக சொத்துக்களை கொண்ட ஒரு தொழிலதிபரின் குடும்பத்திலிருந்து வந்தவர் தான் பூர்வி.

ஆனால் அவர்களது குடும்ப வழக்கப்படி கணவனுக்கு அடிமையாகவும் கணவனை கவனிப்பதிலேயும்தான் தங்களது படிப்பையும் வாழ்க்கையும் செலவிட வேண்டும் என்று பிற்போக்கான எண்ணம் கொண்டவர்கள்.

அந்த குப்தா குடும்பம் பெண் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பார்கள். ஆனால் திருமணம் என்று ஆனவுடன் அவர்கள் தங்கள் கணவனுக்கு அடிமையாகதான் இருக்க வேண்டும் என்ற நிலையில் இப்பொழுதும் இருக்கிறார்கள்.

பிரீத்தாவும் இஞ்சினியரிங்கில் மாஸ்டர் டிகிரின்னாலும் இப்போது கல்யாணம் முடிஞ்சதும் ஜெர்மனியில போய் புருஷனை பாராத்துக்கிட்டு ஹோம்மேக்கராக இருக்கிறாள்.

அதுவும் பணம் ஸ்டேட்டஸ் என்று பார்க்கும் ஆயுஷ் எப்படி நித்ராவை விரும்பமுடியும் என்ற சந்தோகத்தில் அப்படியே விட்டுவிட்டார்.

ஆயுஷ் முதன்முதலாக வயிற்றிற்குள் பட்டாம்பூச்சியை உணர்ந்தான். அதனால் டீக்கூட குடிக்காது பிரஷ்ஷப் பண்ணாது அப்படியே கட்டிலில் படுத்துக் கண்ணை மூடி தனது உதட்டை விரல்களால் வருடியப்படியே படுத்திருந்தான்.

அவனுக்காக மசாலா டீ எடுத்துக்கொண்டு வந்த பூர்வி மகனைப் பார்த்து ஆயுஷ் என்ன இது இப்படிப் படுத்திருக்க? பீவர் எதுவும் இருக்கா என்ன? இப்படி ஆபிஸ்ல இருந்து வந்து ட்ரஸ் மாத்தாம இருக்கமாட்டியே என்னாச்சு? உனக்கு ட்ரஸ் சேஞ்ச் பண்ணலன்னாலயே கடுப்பாகுமே. எரிச்சல்படுவியே என்னாச்சு இன்னைக்கு? டாக்டர்கிட்ட போவோமா?”என்று அடுக்காகக் கேள்விக்கேட்டு அவனருகில் வந்து நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்.

“மம்மீ ஒன்னுமில்ல மம்மீ நீங்க டீயை வைச்சுட்டுப்போங்க நான் பிரஷ்ஷப் ஆகிட்டு வந்து குடிச்சிருக்கிறேன்” என்று வேகமாக எழுந்து வாஷ்ரூம் சென்றான்.

அவனைக் குழப்பத்தோடு பார்த்த பூர்வி நேராக டீயை கிட்சனுக்குக் கொண்டுப்போனார்.

அதைப்பார்த்த நீலம் என்னாச்சு பூர்வி? ஆயுஷ் டீயைக் குடிக்கலையா?

“அவன் பிரஷ்ஷப் ஆகிட்டுவந்துக் குடிப்பான்” அத்தை என்றுவிட்டு போய்விட்டார்.

குப்தாவுக்குத்தான் மனது நிலைக்கொள்ளாமல் தவித்தது. ஆனாலும் எதுவும் நடக்கட்டும் பார்த்துக்கலாம் என விட்டுப்பிடிக்க நினைத்தார்.

அதைவிடவும் ஆயுஷ் அப்படியெல்லாம் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணுக்கிட்ட மயங்கமாட்டான் என்று நம்பினார்.

இங்கே வீட்டுக்கு வந்து படுக்கையில் இருந்த நித்ராவைச் சுற்றி தனம் ருக்குமணி குழந்தைங்க மித்ரா என்று உட்கார்ந்திருந்தனர்.

“ஏன்டி வேலைக்குத்தானடி போன? இரண்டாவது நாளே காலை உடைச்சிட்டு வந்திருக்க?”

“உடைக்கல சின்னதா ஏர்லைன் பிராக்ட்சர் அவ்வளவுதான். அதுக்கு ஏன் இவ்வளவு பேசுறீங்க. அப்படி நான் கஷ்டப்பட்டு சாம்பாதிக்கணுமா

என்ன?”

“ஹான் உங்கப்பா வாங்கி வைச்சக் கடனை யாரு அடைக்கிறதாம்?”

“என் கல்யாணத்துக்கா வாங்கினீங்க. உங்க மூத்த மவ கல்யாணத்துக்குத்தானே அதை அவளும் அவ புருஷனும் சேர்த்து அடைக்கட்டும்,நான் என் கல்யாணத்துக்கு சேர்க்கணும்ல”

“அதானே நீயெல்லாம் பட்டும் திருந்தாத கேஸ்.கால் உடைஞ்சதுக்குப் பதிலா வாய் உடைஞ்சிருக்கணும். எவன் வந்து உடைக்கப்போறானோ?” என்று தனம் அவளது தாடையில் இடித்துவிட்டுப்போனார்.

அவளுக்கு அடி வாங்கியபோதும் கண்ணுக்கு முன்னாடி ஆயுஷ் அவளது வாயை உடைக்க வந்து நின்றான்.

ஆத்தீ இவனா வேண்டாம் கடவுளே?என்று வாய்விட்டே கத்திவிட்டாள்.

அதைப்பார்த்து இவளுக்கென்ன பைத்தியம் பிடிச்சிட்டா?என்று பார்த்தனர்.

ஆமா ஆமா காதல் பைத்தியம் லேசா பிடிச்சிருக்கு.கூடிய சீக்கிரம் பைத்தியம் முத்திடும்!